Go With The Flow
ஸ்பாட்டிங் என்கிற லேசான உதிரப்போக்கு என்றால் என்ன ? மாதவிடாய் காலத்திற்கு முன் ஏன் ஸ்பாட்டிங் ஏற்படுகிறது ? (What Is Spotting and Why Does Spotting Happen Before Periods?)
Table of Contents
Toggleஉங்களுக்கு அடுத்த வாரத்தில் மாதவிடாய் வரும் என்று நீங்கள் ஏற்கனவே கணக்கு போட்டு வைத்திருப்பீர்கள். ஆனலும் அதற்கு முன்பே இன்று உங்கள் உள்ளாடைகளில் நீங்க பார்க்கிற அந்த சீரற்ற உதிர புள்ளிகள் என்னவாக இருக்கும் ? ஆமாம் மாதவிடாய்க்கு முன் இப்படி ஒரு நிகழ்வை கண்டறிவது மிக வெறுப்பான ஒரு உடல் செயல்பாடாக தான் இருக்கும். நீங்கள் இதை என்னவென்றே புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் நீங்க புது ஒரு ஜோடி உள்ளாடைகளை மாற்ற வேண்டியிருந்திருக்கும், அந்த நேரங்களில் வெள்ளை ஜீன்சை அணிந்திருந்தால் இன்னும் பதட்டப்பட்டிருப்பீர்கள், உங்கள் இனப்பெருக்க அமைப்பில் ஏதோ தவறு நடந்துவிட்டது போன்ற எண்ணங்களால் பயந்திருப்பீர்கள். அத்தகைய உங்கள் சந்தேகங்களை எல்லாம் இப்போது நாங்கள் சரிசெய்ய போகிறோம் ! ஸ்பாட்டிங் என்று சொல்லப்படுகிற இந்த லேசான உத்திரப்போக்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நாங்கள் ஆராய்ந்து வைத்துள்ளோம்!
பின்னாளில், இதற்காக நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்லுவீர்கள் 🙂
ஸ்பாட்டிங் அதாவது லேசான உதிரப்போக்கு என்றால் என்ன ? (What is spotting?)
முதலில், நாம் ஒரே விஷயத்தை பற்றி தான் நினைக்கிறோம் என்பதை உறுதிசெய்ய ‘ஸ்பாட்டிங்’ என்றால் என்ன என்பற்கான வரையறையை இப்போது பார்க்கலாம். ஸ்பாட்டிங் என்பது உங்கள் உதிரப்போக்கு காலத்திற்கு முன்பே ஏற்படும் லேசான யோனி வழியே வெளியேறும் உதிரப்போக்குஆகும், மேலும் இது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முழுவதும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கை கண்டறிவது எப்படி ? (But how to identify spotting?)
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கை கண்டறிவதற்கான சில எளிய உதவிக்குறிப்புகள் இங்கே:
நிறம்: இந்த லேசான உதிரப்போக்கு புள்ளிகளாக பெரும்பாலும் வெளிர் இளஞ்சிவப்பு, பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றும். இது சில சமயங்களில் பழைய இரத்தத்தின் நிறத்தை போலவே ஒத்திருக்கலாம்.
ஓட்டம்: நாம் ஏற்கனவே பார்த்தது போல் மிகவும் லேசான ஓட்டம் தான் இருக்கும்.
காலம்: சில மணிநேரங்கள் முதல் இரண்டு நாட்கள் வரை இது நீடிக்கலாம்.
நிலைத்தன்மை: வழக்கமான மாதவிடாய் ஓட்டத்தை விட இந்த லேசான உதிரப்போக்கு பொதுவாகவே மிக இலகுவாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இது டாய்லெட் பேப்பர் என சொல்லப்படும் கழிவறை காகிதத்திலோஅல்லது உள்ளாடைகளிலோ சிறிய புள்ளிகளாகவும் அல்லது கோடுகளாகவும் தோன்றலாம்.
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கிற்கும் உங்கள் மாதவிடாய்க்கும்இடையே உள்ள வித்தியாசம் என்ன ? (What is the difference between spotting and your period?)
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கிற்கும் மாதவிடாய் உதிரப்போக்கிற்கும் இடையே உள்ள கோடு குழப்பத்தை தான் ஏற்படுத்தும், ஆனால் அவை இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் இரத்தத்தின் அளவு தான். ஸ்பாட்டிங் என்பது உங்கள் உள்ளாடைகளில் அவ்வப்போது தோன்றும் சில துளிகள் மற்றும் எந்தவொரு சானிட்டரி பேட்கள் அல்லது சானிட்டரி பொருட்களும் இதற்கு தேவைப்படாமல் இருக்கலாம். மாதவிடாய் உதிரப்போக்கு பல நாட்களுக்கு நீடிக்கும் மற்றும் அதன் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்த சுகாதார பொருட்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
மாதவிடாய்க்கு இடையில் இந்த லேசான உதிரப்போக்கு புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன ? (What Causes Spotting Between Periods?)
மாதவிடாய்க்கு முன்னரே இதுபோன்று தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில காரணங்கள் அதிகபட்ச பாதிப்பில்லாதவையாகவே இருக்கும், சில காரணங்களுக்கு பாதிப்பே கிடையாது. இப்போது அதற்கான பொதுவான சில காரணங்களைப் பார்ப்போம்:
ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள்(Changes in hormone levels)
ஒரு சரியான உலகில், மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு நிலையான
28- நாள் சுழற்சியில் ஒரு கடிகார வேலை போல வந்துவிட்டு செல்கிறது. உங்கள் மாதவிடாய் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். அந்த உதிரப்போக்கு வாரம் முழுவதுமே திட்டமிடப்பட்டப்படி உதிரப்போக்கு ஏற்படாது. ஆனால் மாதவிடாய் சுழற்சி, துரதிர்ஷ்டவசமாக உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளால் தான் ஆளப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் சிறிது அசாதாரண தூண்டுதலின் போது ஹார்மோன்கள் குழம்பிவிடுகின்றன. உங்கள் ஹார்மோன் அளவுகளில் ஏதேனும் திடீரென்ற, எதிர்பாராத ஏற்ற இறக்கமான உதிரப்போக்கையோ அல்லது உதிரபுள்ளிகளை போன்றோ ஏற்படுத்தும். முற்றிலும் பாதிப்பில்லாத இந்த ஹார்மோன் மாற்றங்களுக்கான பல காரணங்களில் ஒன்று – கருத்தடை மாத்திரைகள், ஒட்டுகள், வளையங்கள், ஊசிகள் மற்றும் உள்வைப்புகள் போன்ற பிறப்பு கட்டுப்பாட்டு பயன்பாடு ஆகும். நீங்கள் அவற்றை தொடங்கினாலோ, நிறுத்தினாலோ, தவிர்த்தாலோ அல்லது புதிய கருத்தடை முறையை மாற்றினாலோ, உங்கள் சுழற்சி முழுவதும் இந்த லேசான உதிரப்போக்கு கண்டறியப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். இதிலிருந்து உங்கள் உடல் சரியாகி இயல்பு நிலைக்கு வர சில மாதங்கள் ஆகலாம்.
கருப்பை நார்த்திசுக்கட்டிகள்(Uterine fibroids)
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்பது ஒரு பெண்ணின் குழந்தை பிறக்கும் ஆண்டுகளில் உருவாகக்கூடிய கருப்பையில் ஏற்படும் புற்றுநோய் அல்லாத ஒரு வளர்ச்சியாகும். அவை மிகவும் பொதுவானவை தான், உங்கள் மாதவிடாய்க்கு காலத்திற்கு இடையில் உதிரப்போக்கு புள்ளிகளை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். சில சந்தர்ப்பங்களில், அவை கருவுறுதலையும் பாதிக்கலாம், இதனால் கர்ப்பம் தரிப்பதும் மேலும் கர்ப்பத்தை தக்கவைப்பதும் கடினமாக சிறிது வாய்ப்பு உள்ளது. நார்த்திசுக்கட்டிகளைப் பற்றிய ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவைத் தானாகவே சுருங்கி பின் மறைந்துவிடும் என்பது.
எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis)
எண்டோமெட்ரியம் என்பது திசுவின் அடுக்கு ஆகும், இது கருப்பையை சுற்றி வரிசைப்படுத்துகிறது, இந்த அடுக்கு உதிர்ந்த பின் மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாகிறது. எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள திசுக்கள் போன்ற பகுதிகளில் கருப்பைக்கு வெளியே எண்டோமெட்ரியம் போன்ற திசுக்கள் வளருகின்ற ஒரு நிலை தான். இந்த லேசான உதிரப்போக்கை கண்டறிவதோடு, அவர்களுக்கு இடுப்பு மற்றும் வயிற்றுப் பிடிப்பு, அதிக மாதவிடாய் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிற அறிகுறிகளும் இருக்கலாம். நீங்கள் எண்டோமெட்ரியோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவரிடம் சென்று நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும்.
உதிரப்போக்கிற்கான சில பொதுவான காரணங்கள் என்ன? (What Are Some Common Causes of Spotting?)
- பாலியல் பரவும் நோய்கள் (STDs)
- இடுப்பு அழற்சி நோய் (PID)
- சினைப்பை நீர்கட்டிகள் (PCOS)
- மன அழுத்தம்
இந்த லேசான உத்திபோக்கு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வகையான உதிர புள்ளிகள் உள்வைப்பு உதிரப்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது மேலும் பொதுவாக கருத்தரித்த 1 முதல் 2 வாரங்களுக்குப் பிறகு இது ஏற்படக்கூடும். நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும் அல்லது வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்யவும்!
எப்போது உதவியை நாட வேண்டும்? (When to seek help?)
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு மருத்துவ அவசரநிலையை விட இந்த ஸ்பாட்டிங் என்கிற லேசான உதிரப்போக்கு ஒரு தொல்லையாகவே அமைந்துவிடும். இருப்பினும், இது ஏதாவது தொற்று போன்ற தீவிரமான அறிகுறியாகவும் இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்வது நல்லது. உங்களுக்கு இந்த லேசான உதிரப்போக்கு எப்போது ஏற்படுகிறது என்றும் மேலும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகள் (ஏதேனும் இருந்தால்) உங்கள் மருத்துவரிடம் முழு அறிக்கையை கொடுக்கவும், இது நோயறிதலையும் மேலும் சிகிச்சையையும் எளிதாக்குகிறது. லேசான உதிரப்போக்குடன் இங்கே குறிப்பிட்டுள்ள ‘அறிகுறிகளையும்’ நீங்கள் சேர்த்து கொள்ளலாம்:
- இடுப்பு மற்றும் வயிற்று வலி
- தலைச்சுற்றல்
- காய்ச்சல்
- வலிமிகுந்த உடலுறவு
- உங்கள் பிறப்புறுப்புகளில் எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல்.
- மூச்சுத் திணறல்
மாதவிடாய் காலத்திற்கு முன் ஸ்பாட்டிங் என்கிற லேசான உதிரபோக்கிற்கான சிகிச்சை (Treatment of Spotting before Period)
உங்களுக்கான சிகிச்சையானது உங்களது உதிரப் புள்ளிகள் மற்றும் அதன் அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்பதைப் பொறுத்து தான் அமையும். இருப்பினும், மாதவிடாய்க்கு முன் ஏற்படும் பெரும்பாலான நிகழ்வுகள் முற்றிலும் பாதிப்பில்லாதவை தான் மேலும் மருத்துவ தலையீடு தேவையில்லை. ஆனால் நோய்த்தொற்றுகள் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் போன்ற தீவிரமான ஒன்றைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், மருத்துவரைப் பார்ப்பது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) (Frequently Asked Questions (FAQs))
லேசான உதிரப்போக்கை கண்டறிவது எப்படி ? (How do you know if you’re spotting?)
சுழற்சியில் இருந்து உதிரப்போக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், அது உங்கள் வழக்கமான மாதவிடாயைப் போல அதிகமாக இல்லை என்றால், அது ஸ்பாட்டிங் என்கிற லேசான உதிரப்போக்கு புள்ளிகள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
லேசான உதிரப்போக்கு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் ? (What does spotting look like?)
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கு உங்களது சாதாரண மாதவிடாய் உதிரப்போக்கு போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இருக்கும். சில நேரங்களில், இது இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாகவும் இருக்கலாம். எதையும் பொருட்படுத்தாமல், உதிரப்போக்கு மிகவும் லேசானதாக இருந்தால், அதை ஸ்பாட்டிங் எனக் கருதலாம்.
மாதவிடாய்க்கு முன் லேசான உதிரப்போக்கு என்றால் என்ன? (What does spotting before period mean?)
உண்மையில் பெரிதாக எதுவும் இல்லை. உங்கள் உடல் சில ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகலாம் மேலும் இறுதியில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த வலைப்பதிவில் லேசான உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய சில சாத்தியமான காரணங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம், அதைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? (What are the causes of spotting?)
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கு புள்ளிகளாகத் தோன்றுவதற்கான சில பொதுவான காரணங்கள் இங்கே:
- ஹார்மோன் மாற்றங்கள்
- கருப்பை நார்த்திசுக்கட்டிகள்
- எண்டோமெட்ரியோசிஸ்
- பாலியல் மூலம் பரவும் நோய்கள்
- இடுப்பு அழற்சி நோய்கள்
- PCOS
- மன அழுத்தம்
- கர்ப்பத்தின் அறிகுறி (உள்வைப்பு இரத்தப்போக்கு)
ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கு கவலைப்பட வேண்டிய விஷயமா? (Should I be worried if I am spotting?)
இல்லை, இதுபோன்ற லேசான உதிரப்போக்கு பொதுவாக இயல்பானது தான். உங்கள் புள்ளிகளாகத்தோன்றக்கூடிய இந்த லேசான உதிரப்போக்கு வேறு ஏதேனும் தீவிரமான நிலைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் எனில், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடுவது எப்போதும் சிறந்ததாக இருக்கும்.
கர்பத்திற்கான லேசான உதிரப்போக்கிற்கும் மாதவிடாய்-க்கும் என்ன வித்தியாசம்? (What does pregnancy spotting look like VS period?)
கர்பத்திற்கான லேசான உதிரப்போக்கு அல்லது உள்வைப்பு உதிரப்போக்கு பொதுவாக இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் மேலும் உங்கள் மாதவிடாய் ஓட்டத்தை விட இது இலகுவாக தான் இருக்கும்.
ஸ்பாட்டிங் என்கிற லேசான உத்திப்போக்கு ஏற்பட்டால் கர்ப்பமாக இருப்பது என்று அர்த்தமா? (Does spotting mean you are pregnant?)
ஸ்பாட்டிங் என்கிற லேசான உத்திப்போக்கு கர்ப்பத்தின் சாத்தியமான அறிகுறியாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே கர்ப்பத்தை தானே குறிக்காது. சில ஹார்மோன் மாற்றங்கள், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், மன அழுத்தம் அல்லது கர்ப்பத்துடன் தொடர்பில்லாத பிற காரணிகளின் விளைவாக பல்வேறு காரணங்களுக்காக இந்த லேசான உதிரப்போக்கு புள்ளிகளாக ஏற்படலாம். நீங்கள் கர்ப்பமாக இருப்பதாகா உணர்ந்தால், கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது அல்லது உறுதியான தெளிவுப் பெற வேண்டுமெனில் ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது சிறந்ததாக இருக்கும்.
ஸ்பாட்டிங் என்கிற லேசான உதிரப்போக்கு ஏற்பட்டால், நான் மருத்துவரை அணுக வேண்டுமா? (Do I need to see a doctor for my spotting?)
உங்களுக்கு ஏற்படும் ஸ்பாட்டிங் என்கிற இந்த லேசான உதிரப்போக்கு பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் எனில், உங்கள் உடல்நலத்தையும் நல்வாழ்வை உறுதிப்படுத்த தொழில்முறை மருத்துவ ஆலோசனையைப் பெறுவது எப்போதும் சிறந்தாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் லேசான உதிரப்போக்கு புள்ளியிடுதலாக தோன்றுவது இயல்பானதாகவும் பாதிப்பில்லாததாகவுமே இருக்கும் அதே சமயம், சின் சினைப்பை நீர்ட்கட்டிகள்(PCOS), பாலியல் பரவும் நோய்கள் (STDs), எண்டோமெட்ரியோசிஸ் போன்ற மருத்துவ கவனிப்பு தேவைப்படுகின்ற அடிப்படைப் பிரச்சினையையும் இது குறிக்கலாம். உங்கள் மருத்துவ அறிக்கைகள், அறிகுறிகள் மற்றும் தேவையான கூடுதல் சோதனைகளின் அடிப்படையில் இந்த லேசான உதிரப்போக்கிற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர் உங்களுக்கு உதவலாம்.
Popular Searches
- पीरियड ज्यादा दिन तक आने के कारण और उपाय
- Menopause Facts
- Normal period flow
- पीरियड बंद होने के कारण
- पीरियड्स कितने दिन होना चाहिए
- Reduce amh levels in pcos
- Causes of vulvar pain
- How to get periods immediately
- मासिक पाळी न आल्यास काय करावे
- Pcod after marriage
- पीरियड लाने का उपाय
- पीरियड में मांस के टुकड़े आना
- how to stop periods immediately
- how to cure pcod permanently
Trending Stories
Go With The Flow
Struggling with Heavy Menstrual Bleeding? What You Need to Do to Manage It!
May 6, 2022 . 10 mins read
Go With The Flow
How to Get Your Periods Immediately: 4 Home Remedies to Get Your Periods Immediately
September 30, 2024 . 34 mins read
Go With The Flow
PCOS: पीसीओएस क्या है? जानिए इसके संकेत, लक्षण, कारण और बचाव के उपाय सहित पूरी जानकारी
October 26, 2023 . 3 mins read
Comments